2033.
|
வண்ட
லார்வயற் சாலி யாலைவ
ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
கொண்ட லார்கொணர்ந்
தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெ லாந்து திசெய்ய நின்ற
தொழில னேகழ லால ரக்கனை
மிண்டெ லாந்தவிர்த்
தென்னுகந்திட்ட வெற்றிமையே. 8 |
2034.
|
கருதி
வந்தடி யார்தொ ழுதெழக்
கண்ண னோடயன் றேடவானையின்
குருதி மெய்கலப்ப
உரிகொண்டு கோட்டாற்றில் |
படுத்தக்கொண்டிருக்கும்
பேரன்பு விளங்கும். (பதி. 220 பா.11, பதி.221 பா.11,
தி.3 பதி.118. பா.11).
8. பொ-ரை:
வண்டல் மண் பொருந்திய நெல்வயல்களும்
கரும்பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு
வந்து தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில்
புரிபவனே! திருவடியால் இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பின்
அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ?
கு-ரை:
வண்டல்-நீர் ஒதுக்கிய மண். சாலி-நெல். ஆலை-
கரும்பாலை கரும்பு. கொண்டலார்-தென்றலார் போல். தென்றலார்
புகுந்துலவும் திருத்தோணிபுரத்து (தி.1 ப.60 பா.7). தொண்டு-
தொண்டர்கள்; சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை; வேந்து
அரசு ஒற்று முதலியனபோல. ஆகுபெயருமாம். துதி-தோத்திரம்.
மிண்டு-திண்மை. மிண்டனுக்கு இரண்டாள் என்பது வழக்கு.
தவிர்த்து-நீங்குதல். வெற்றிமை-வென்ற தன்மை. (பதி.186 பா.9).
9. பொ-ரை:
அடியவர் கருதி வந்து தொழுது எழவும்,
கண்ணனோடு பிரமன் தேடவும், ஆனையின் குருதி மெய்யில் கலக்குமாறு
அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு
உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில்
|