பக்கம் எண் :

634

விருதி னான்மட மாது நீயும்வி
     யப்பொ டுமுயர் கோயில் மேவிவெள்
எருதுகந் தவனே
     யிரங்காயுன தின்னருளே.            9
2035.







உடையி லாதுழல் கின்ற குண்டரும்
     ஊண ருந்தவத் தாய சாக்கியர்
கொடையி லாமனத்தார்
     குறையாருங் கோட்டாற்றில்
படையி லார்மழு வேந்தி யாடிய
     பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
அடைகி லாதவண்ணம்
     அருளாயுன் னடியவர்க்கே.          10


எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக உகந்த பெருமானே! உனது
இனிய அருளை வழங்க இரங்குவாயாக.

     கு-ரை: அடியார் கருதி வந்து தொழுது எழ என மாற்றுக.
கண்ணன்-கிருஷ்ணன் என்னும் வடசொல்லின் திரிபாக்கொள்ளின்
கறுப்பன் என்னும் பொருளாம்; தமிழாக்கொள்ளின் சினைப்பெயரடியாப்
பிறந்த பெயராம். கருதுபவனுமாம் ‘ஆனையின். . . கொண்டு’-யானை
உரித்த வரலாறு. குருதி-இரத்தம். விருதினான்-விருதுகளால். மடமாது-
உமாதேவி. வெள்எருது-நரைவெள்ளேறு. உகந்தவன்-விரும்பியவன்.

     10. பொ-ரை: உடை உடுத்தாது திரியும் சமணரும், ஊண்
அருந்தாத தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர்.
அவர்கள் கூறும் குறை உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக
மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள் உன்னை
அடையாமைக்குரிய காரணம் யாது? அதனை அடியவர்க்குக் கூறியருளுக.

     கு-ரை: குண்டர்-சமணர். ஊணருந்தவம்-உண்ணுதலில்லாத தவம்.
அருமை-இன்மை; ‘அருங்கேடன்’ (குறள்) குறை-குறை கூறுதல். இவர்-
குண்டர் முதலிய இவர்கள். நுனை-உன்னை. அடைகிலாத வண்ணம்
என்கொலோ -அடைந்து தொழுது உய்யாதவாறு என்னோ?. உன்
அடியவர்க்கு அருளாய்-உன்னடியவர்களுக்கு அக்