2036.
|
கால
னைக்கழ லாலு தைத்தொரு
காம னைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள்
குடிகொண்ட கோட்டாற்றில்
மூல னைமுடி வொன்றி லாதவெம்
முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க்
கெளிதாகும் வானகமே. 11 |
திருச்சிற்றம்பலம்
காரணத்தை உணர்த்தியருளாய்.
ஆசிரியரும் தம்மை அப்படர்க்கையில்
அடக்கிக் கொண்டார்.
11. பொ-ரை:
காலனைக் கழலணிந்த காலால் உதைத்தும்,
காமனை நெற்றிக் கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு
பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு
கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும்
மூலகாரணனை முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய
இத்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்க்கு வானகம் எளிதாகும்.
கு-ரை:
கழலால் - கழலணிந்த திருவடியால். தானியாகு பெயர்.
கனலாகச் சீறி-தீயாகி வேவக் கோபித்து. கோலவார் குழலாள்
மெய்குடிகொண்ட; என்று கூட்டி மாதியலும் பாதியன் என்க. (ப,189. பா.11).
மெய் - பெருமான் திருமேனி. மூலன் - அநாதிகாரணன். படைப்போற்
படைக்கும் பழையோன். முத்தன்-இயல்பாகவே பாசங்களில்லாதவன்.
வானகம்-வீடு.
|