பக்கம் எண் :

638

2040.







மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி
     மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப்
     புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
     அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந்
     தவத்தார்க் கருளாயே.        4


     கு-ரை: மிளிர்தல்-ஒளிர்தல். கமுகம்-பாக்கு. பூளை-ஒரு செடி. இது
சிறுமை பெருமையால் இருவகைப்படும். ‘இரும்பூளை’ (பதிகம். 172) ‘மாருதம்
அறைந்த பூளைப்பூ’. என்று உவமை கூறலாவதும் இதனையே. மதமத்தம்-
உக்கிரகந்தத்தையுடைய ஊமத்தை, புனைவாய்-அணிபவனே. கழல்-கழல்களை
அணிந்த. இணைத்தாள்-இரண்டு திருவடிகள். ஏகாரம் பிரிநிலை, ‘சாம்பகல்
அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே’ (ப.180 பா.3.)

     4. பொ-ரை: வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென்
கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்று
குளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி
ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து
அடி பரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.

     கு-ரை: மேதி-எருமை, வைகறை-விடியற்பொழுது. பழனம்-வயல்.
அடிகள்-சுவாமி, கடவுள். சிவபெருமானை ‘அடி’ என்றும், கள்விகுதிசேர்த்து
உயர்வு குறித்து ‘அடிகள்’ என்றும் வழங்குதல் மரபு, ‘திருவடி சேர்ந்தார்’,
‘அடிசேர் ஞானம்’ என்பவற்றால் அவ்வுண்மை புலப்படும். ‘இறைவனடி
அடைவிக்கும் எழில் ஞானபூசை’ என்பது முதலிய இடங்களில்
சிவஞானத்தைக் குறித்தல் உணர்க. சிவனையும் சிவஞானத்தையும்
அடைந்தவர் அடியார் என்பர். எல்லாவற்றிற்கும் அடி (மூலம்) சிவஞானமும்,
சிவமும் அன்றி வேறில்லை. ‘அடியார் சிவஞானமானது பெற்றோர்’
(திருமந்திரம். 1672.) ‘முதல்வனது திருவடியாகிய சிவானந்தத்தை’ (சிவஞான
பாடியம். சூ. 10. அதி. 1. ஏதுவின் விளக்கம்) ‘முதல்வன் திருவடியாகிய
சிவானந்தாநுபூதி’ (ஷ 11. உரை) ‘முதல்வனொருவனே ஞாயிறும் ஒளியும்
போலச் சிவனும் சத்தியும் எனத் தாதான்மியத்தான் இருதிறப் பட்டுச்
சருவவியாபியாய்ப் பொதுமையில் நிற்பன்’ (ஷ சூ. 2.அதி.