2041.
|
செங்க
யல்லொடு சேல்செ ருச்செயச்
சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும்
புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே
அடியார்க் கருளாயே. 5 |
4.) ஆதலின், அடி
என்று சிவத்தையும் சிவஞானத்தையும்
உணர்த்தலாயிற்று. உயிர்கள் அதை அடையுங்காலம்; யான் எனப்படும்
ஞஎதாவும், எனதெனப்படும் ஞானமும், அதற்கு விடயமாய் எனதெனப்படும்
ஞேயமும் எனப் பகுத்துக்காணும் மயக்கவுணர்விற்கு ஏதுவாகிய மலவாசனை
நீங்குங்காலம் ஆதலின், பரை உயிரில் யான் எனது என்று அற நின்றது
அடியாம் என்றது உண்மை நெறி விளக்கம். பின் வந்த குமரகுருபர
முனிவரரும் யான் எனது என்பது அற்ற இடமே திருவடி என்றருளினார்.
கடவுளைச் சிவாகம
விதிப்படி உருவுடையவராகக் கற்பித்துக்
கொண்டு வழிபடுவார் அதன் திருவடிகளைக் குறிக்கும் உண்மையும்
ஆய்ந் துணர்க, உருவினதடிமுடி (தி.1 ப.126 பா.9) ஆரொருவருள்குவார்
உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் (தி.6 பா.18
ப.11). யேன யேன ஹி ரூபேண ஸாதக: ஸம்ஸ் மரேத ததாதஸ்ய தந்மயதாம்
யாதி சிந்தாமணி: இவ ஈஷ்வர: என்ற சர்வசுரோத சங் கிரகம் கூறும்
ஆற்றாலும் உருவ வழிபாட்டின் சிறப்பை உணர்க. என்று என்று:-அடுக்கு.
பலகாலும் அரற்றல் வேண்டுமென்றது குறித்து நின்றது. மலர் சாய்ந்த
அடி-பூக்கள் வீழ்ந்த திருப்பாதங்களை. தாமரை தோற்றதிருத் தாள்
எனலுமாம். சாய்ந்த-அகரம் தொகுத்தல். மலரால், அடிகளைச் சாய்ந்து
(விழுந்து) பரவும் (வாழ்த்தும்) எனலுமாம்.
5. பொ-ரை:
செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல
ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில்
கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி
மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று
போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.
|