பக்கம் எண் :

640

2042.







நீரி னார்வரை கோலி மால்கடல்
     நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப்
     புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
     கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந்
     திறத்தார்க் கருளாயே.            6


     கு-ரை: செங்கயல் சேல் இரண்டும் போர்செய்ய மலரும்,
தேனினத்தொடு மலரும் என்றியைக்க. சிறுமை+யாழ்-சீறியாழ். பேரி யாழ்
வேறுண்டு. இப்பிரிவால் பாணரும் சிறுபாணர் பெரும்பாணர்
என்றிருவகைப்படுவர்.

     தேன்-வண்டு, யாழ்முரல்-யாழின் ஒலி போல முரலு (ஒலித்)தல்.
கேண்மையாள்-உமாதேவியார். கேள்+மை-கேளாந் தன்மை. உரிமை, ‘உன்
பெருந்தேவி என்னும் உரிமை’, மறி-கன்று. ஆடல் (ஆள்+தல்) ஆளுதல்,
ஆடலன்-ஆளுதலையுடையவனே. மான் கன்றேந்திய அழகியகையன்
என்றவாறு. அகங்கையுமாம். ‘அங்கையிற்படையாய்’ (ப.187. பா.5)

     6. பொ-ரை: பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில்
சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள்தோறும் பிரியாது
வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை
அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள்தோறும் சிறப்போடு வழிபடும்
அடியவர்கட்கு அருள் புரிவாயாக.

     கு-ரை: நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில்-நீரால்
(அரணாகப்) பொருந்திய எல்லையை வகுத்துப், பெரிய கடல் நெடுகப்பரவிய
சோலை, சூழ்ந்து பிரியா ஊர் என்க. சூழ்தல் சோலையின் வினை, பிரியாமை
பாரினாரது.

     பாரினார்-மண்ணுலகத்தார். வைகலும் பிரியா-நாடோறும் நீங்காது
வழிபடும். காரின் ஆர்மலர்க் கொன்றை:- ‘கண்ணிகார்நறுங் கொன்றை’
என்றவாறு, கார்காலத்தில் கொன்றை மிகுதியாகப் பூப்பதுணர்த்திற்று.
கூப்பி-குவித்து கூம்பி-தன்வினை, கூப்பி-பிறவினை.