2043.
|
கைய
ரிவையர் மெல்வி ரல்லவை
காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும்
புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையொர் பாக மாகவும்
மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா வடிமை
புரிந்தார்க் கருளாயே. 7 |
2044.
|
தூவி
யஞ்சிறை மெல்ந டையன
மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும்
புறவார் பனங்காட்டூர் |
7. பொ-ரை:
மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப்
படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார்
பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக்
கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி
நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக.
கு-ரை:
அரிவையர்-மகளிர்: கைமெல்விரலவை-கையிலுள்ள மெல்லிய
விரல்கள். அவை ஈண்டுச்சுட்டல்ல, நிலமது பொருளது என்பவற்றில் அது
என்னும் ஒருமை சுட்டாதவாறு போல இதிற் பன்மை சுட்டாது நின்றது.
நிலம் பொருள் என்றல்லாத வேறு பொருளில்லை, ஈண்டு விரலல்லாத
வேறு பொருள் ‘அவை’ என்றதற்கு இல்லை. பை - படம். அரா-பாம்பு.
அராவிரியும் = அராவைப்போல மலரும். காட்டி விரியும். அரிவை -
உமாதேவியார். மெய் - திருமேனியில், ஓர் பாகமாகவும் மேவியவனே!
(ப.188.பா.11). பொய்யிலா அடிமை-மெய்யடிமை.
8. பொ-ரை:
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை
உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில்
வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய்
இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள்
வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.
|