பக்கம் எண் :

642

மேவி யந்நிலை யாய ரக்கன
     தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான்
     என்பவர்க் கருளாயே.             8
2045.







அந்தண் மாதவி புன்னை நல்ல
     அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள்
     சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
     என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே
     தவத்தார்க் கருளாயே.            9
2046.



நீண மார்முரு குண்டு வண்டினம்
     நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும்
     புறவார் பனங்காட்டூர்


     கு-ரை: தூவி - இறகினடிப்பாகம். அனம் - அன்னப்பறவை, பாவில்
-பரப்பில். ஏவிய - ஏவல் செய்ய, ஆக்ஞை செய்த.

     9. பொ-ரை: அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை,
நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட
ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய
முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய்
அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு
அருள்புரிவாயாக.

     கு-ரை: அம்தண் - அழகும் குளிர்ச்சியும் உடைய. அரவிந்தம்-
தாமரை. தண்+ஞாழல்கள்-தணாழல்கள். ஞாழல்மரம். எந்து - எமது!
முகில் - மேகம். என்ற இவர்க்கு அகரம் தொகுத்தல். சந்தம் - அழகு,
கருத்து, ஆயவன் - ஆனவன்.

     10. பொ-ரை: வண்டுகள், பெருகி நிரம்பிய தேனை உண்டு
நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும்