பக்கம் எண் :

643

நாண ழிந்துழல் வார்ச மணரும்
     நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே
     உகப்பார்க் கருளாயே.             10
2047.







மையி னார்மணி போல்மி டற்றனை
     மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ்
     புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள்
     ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார்
     சிவலோகஞ் சேர்வாரே.            11

                  திருச்சிற்றம்பலம்


புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற
புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரியவனே!
உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.

     கு-ரை: நீணம்-நீளம். ‘நீணுதல்’ (தி.1 ப.1. பா.9) முருகு-தேன். பாண்-
பாட்டு. நக-சிரிக்க. தலையூண் உரியவனே- பிரம கபாலத்தில் வாங்கி
உணவு கொள்ளுதற்கு உரியவனே.

     11. பொ-ரை: கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை,
குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த
பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார். பனங்காட்டூர் ஐயனை,
காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச்
செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.

     கு-ரை: மையின்-மேகத்தைப்போல. மாசு-குற்றம். பைய-பசுமையுடைய.
ஆய்ந்த-(முற்பிறவியில்) ஆராய்ந்த. செய்யுள்-இத் திருப்பதிகத்தை.