பக்கம் எண் :

646

2051.







கையிலார்ந்த வெண்மழுவொன்
          றுடையீர்கடிய கரியின்றோல்
மயிலார்ந்த சாயன்மட
          மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள்
          பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே
          கோயிலாக விசைந்தீரே.       4
2052.







நாவார்ந்த பாடலீர்
     ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின்
     பயன்களானீ ரயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும்
     வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே
     கோயிலாகத் திகழ்ந்தீரே.        5


     4. பொ-ரை: கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில்
போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை
மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும்
அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக்
கொண்டுள்ளீர்.

     கு-ரை: கையில் என்பதில் ஐகாரம் ஒரு மாத்திரை யொலிப்பது
‘சங்கக் கயனும்’ (தி. ப. 36 பா.9). கரி-யானை, ஆர்ந்த-ஒத்த, வெருவா-
(அஞ்சிவாய்) வெருவுதலடைய, தோல் போர்த்தீர் என்க. பயில்-(மறைப்)
பயிற்சி, முதனிலைத் தொழிற்பெயர். எயில்-மதில்.

     5. பொ-ரை: நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே!
ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும்
பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த
பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில்
தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு
திகழ்கின்றீர்.

     கு.ரை: பாடல்-வேதகீதம். அரைக்கு-திருவிடையில். ஆர்த்