2053.
|
மண்ணார்ந்த
மண்முழவந்
ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப்
பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை
மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே
கோயிலாகக் கலந்தீரே. 6 |
2054.
|
களிபுல்கு
வல்லவுண
ரூர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர்
அமரரேத்த வருள்செய்தீர் |
தீர்-கட்டினீர். பாவும்
அதன் பொருளும் அதன் பயனும் ஆயினீர்.
அயன் பேணும் புகலி-பிரமன் பூசித்த சீகாழி; பிரமபுரம். பூ-தாமரை மலர்.
பூவினுக்கருங்கலம், பொங்கு தாமரை பூவிற்குத் தாமரையே. தே-பிரளய
காலத்திலும் அழியாத தெய்வத்தன்மை.
6. பொ-ரை
மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு-வலந்தரை)
மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்)
ஒலிக்க-இமவான் மகளாகிய பார்வதி தேவி திருமேனியிற் பொருந்தி
விளங்க, விரும்பிக் கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற்
பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில்
கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு
கலந்துள்ளீர்.
கு.ரை:
மண்-மார்ச்சனை. முழவம்-மத்தளம். (மிருதங்கம்) ததும்ப
மகிழ ஆடினீர் என்க. மலையான் மகள் என்னும் பெண்-இமாசல ராசன்
குமாரி எனப்படும் உமாதேவியார், நாமகள் திரு மகள் மலைமகள்
மலைப்பெண் என்புழிப் போலத் தேவி என்ற பொருளைக் குறித்தலறிக.
மெய்-திருமேனி. மகிழ-பூரிக்க, மெய் மகிழ என்றது அரிய பிரயோகம்.
மிடை-நெருங்கிய. சந்திர மண்டலம் அளவும் ஓங்கிய மாடம் என்றவாறு,
வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம். வியன்-அகலம். புகலிக்கண்
ஆர்ந்த சீகாழியில் பொருந்திய.
7. பொ-ரை:
களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள்
எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடைய
|