|
தெளிபுலகு
தேனினமு
மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே
கோயிலாக வுகந்தீரே. 7 |
2055.
|
பரந்தோங்கு
பல்புகழ்சே
ரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட்
டுகவையளித்தீ ருகவாதார்
புரந்தோன்று மும்மதிலு
மெரியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 8 |
வரே! தேவர்கள் வழிபட
அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தெளிந்த
தேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி
பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
கு.ரை:
களி-களிப்பு. முதனிலைத் தொழிற்பெயர். புல்கு-பொருந்திய.
மூன்று ஊர்-முப்புரம். அளி-வண்டுகள். அமரர்-தேவர். மரணமில்லாதவர்
-நெடிது வாழ்பவர். ஏத்த-துதிக்க, தெளி-தெளிவு. கலங்கலின்மை-கலங்கல்
நீக்கம். விரை மணம். ஒளி-சிவப்பிரகாசம். சுடரொளியுமாம். உகந்தீர் -
விரும்பினீர்.
8. பொ-ரை:
பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை
மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு
மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகி்ழ்வில்லாத அசுரர்களின்
மும்மதில்களையும் எரியச் செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம்
தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
கு-ரை:
பரந்து ஓங்குபல் புகழ்-உலகம் எங்கும் பரவி ஓங்கிய
பெருங்கீர்த்தி, இராவணன் திரிலோக சஞ்சாரியாதலின் அத்தகு புகழ்
பெற்றனன். உரம்-அறிவு, கைத்தலங்கள். . . . பத்திலங்கு வாயாலும் பாடல்
கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமதத்துவனை. . .ச்
சாராதே சாலநாள்போக்கினேனே (தி.6 ப.79. பா.10) எறியுமா கடல்
இலங்கையர்கோனை. . . அடர்ந்திட்டுக் குறிகொள் பாடலின் இன்னிசை
கேட்டுக் கோலவாளொடு நாளது கொடுத்த
|