பக்கம் எண் :

649

2056.







சலந்தாங்கு தாமரைமே
     லயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங்
     காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி யைம்புலனுஞ்
     செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே
     கோயிலாக நயந்தீரே.           9
2057.







நடிதாய வன்சமணு
     நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுரையாற்
     கழறமேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர்
     புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.         10
2058.







ஒப்பரிய பூம்புகலி
     யோங்குகோயின் மேயானை
அப்பரிசிற் பதியான
     அணிகொண்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழாற்
     றெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசி லிடர்நீங்கி
      யிமையோருலகத் திருப்பாரே.    11


செறிவு கண்டு நின் திருவடியடைந்தேன் செழும் பொழிற்றிருப்புன்
கூருளானே’ (தி.7 ப.55 பா.9). ‘அரக்கன் ஆற்றல் அழித்து அவன்
பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை’ (தி.7 ப.62 பா.9). (ஸாமபி:
விவிதை: ஸ்தோத்ரை ப்ரணம்ய ஸ தஸா நந;) என்று வான்மீகி ராமாயணம்
உணர்த்து மாற்றால் அச்சாம வேதத்தையே உரந்தோன்றும் பாடல் என்றார்.
புரம். . மும்மதில்-முப்புரமாகத் தோன்றியமதில். வரம் தோன்று கோவில்-
‘வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்துறைந்தனை’ (தி.1 ப.128 அடி.31)

     9. பொ-ரை: நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும்,
உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும்
காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று
ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக்
கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: சலம்-நீர். அயன்-பிரமன். தரணி-பூமி. அளந்தான்-திருமால்.
மாவலியிடம் மூவடி மண் பெற்ற வரலாறு. ஓங்கியவன் அயன், இழிந்தவன்
அரி. கனல் - தீ. புலம்-மெய்யுணர்வு. செற்றார்-அழித்த ஞானியார். அடியார்.
நலம்-அழகு, நன்மை. நயந்தீர்-விரும்பினீர்.

     10. பொ-ரை: காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும்,
நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப்
பேச, மேலானதொரு மெய்ப் பொருளாக விளங்குபவரே! பொடி பூசியவரே!
புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே
உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.

     கு-ரை: நிறைவு-சமயக்கொள்கையின் நிறைவு அறிவின் நிறைவுமாம்.
கடிது-கடுமையுடையது. கழற-பழித்துப்பேச. மேல் ஓர் பொருள்-மேலாக ஒரு
மெய்ப்பொருள். பொடி-திருநீறு. புரிந்து-இடைவிடாது நினைந்து. வடிவு
ஆகும்-அழகு நிறைந்த தோற்றமும் ஆம்.

     11. பொ-ரை: ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள்
மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய
ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால்
ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும்
இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள்.

     கு-ரை: மேயான்-மேவியவன். பரிசு-தகைமை. செப்ப அரிய-
அருள்பெறாதவர் சொல்லுதற்கு அருமையவாகிய. தெரிந்த-ஆராய்ந்த.

     ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும்-ஆதியாம்
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும்-துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும்-முன்னிய
சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த வள்ளலை-அந்தமில்சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின் வான்பொருளை-ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத் தவர் அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை-முத்தமிழின்
செஞ்சொற்பொருள் பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்
அஞ்சத் திகழ்ந்த அடல் உருமை-எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலிற்
கோதில் அமிர்தம்நுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த-சீலத்
திருஞான சம்பந்தன் என்றுலகஞ் சேர்ந்த
ஒருநாமத் தால் உயர்ந்த கோவை.

-தி. 11 நம்பியாண்டார் நம்பிகள்.