2062.
|
வேடஞ்சூழ்
கொள்கையீர்
வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும்
உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங்
குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே. 4 |
2063.
|
சூலஞ்சேர்
கையினீர்
சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர்
நீண்டசடைமே னீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கான
லன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே
கோயிலாகக் கொண்டீரே. 5 |
கு-ரை:
சீர்-கனம், மேன்மை. பாடல்-வேதப்பாடல், சாமகானம்,
ஏறு-எருது. ஊர்தி-வாகனம். சிவபூசை செய்வார்க்கு இன்றியமையாத
பொருள் நீரும் பூவும் என்பது குறிக்கப்பட்டது. தார்-மாலை, தார்கொண்ட
மார்பர். நூல் (பூணு நூல்) அணிந்த மார்பர் என்க. தக்கோர்-அந்தணாளர்.
(பா.8) ஏர்-அழகு.
4. பொ-ரை:
தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும்
இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை
உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச் சங்கையில் கூடம், மண்டபம்
வாயிலில் கொடி தோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை
இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
வேடம்-பலபல வேடம் ஆகும் பரன், உச்சியிலுள்ள
கங்கையில் திங்கள் ஓடம்போல் உளது. கூடம், மண்டபம், மாடம் என்பன
இட விசேடங்கள், வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க.
5. பொ-ரை:
சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய
வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்
|