பக்கம் எண் :

653

2064.







நிலிநீரொ டாகாச
     மனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார்
     பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார்
     தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே
     கோயிலாக நயந்தீரே.           6
2065.



அடிபுல்கு பைங்கழல்கள்
     ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல்
     உமையோர் பாகங்கூடினீர்


     கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில்
அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச் சங்கையில் உள்ள அழகிய
கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     கு.ரை: சூலம்-‘மூவிலைவேல்’. சுண்ணம்-பொடியாகிய. ஆடலீர் -
மூழ்குதலுடையீர். நீராடல் போல் நீறாடல். நீர் - கங்கை. ஆலம்-நீர்.
மன்னும்-பொருந்தும். கோலம்-அழகு; வடிவமுமாம்.

     6. பொ-ரை: நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய
ஐம்பூத வடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது
வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாத
தக்கோர் வாழும் தலைச் சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக்
கொண்டுள்ளீர்

     கு-ரை: நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களாகி நின்றவன் இறைவன்.
அட்டமூர்த்தங்களுள் முதலைந்தும் இவையே. ஐந்துபுல நீர்மைபுறம்
கண்டார்-ஐம்புலன்களை வென்றவர். பொக்கம்-பொய். போற்று-துதி.
ஓவார்-நீங்கார். சலம்-மாறுபாடு; வஞ்சகம். நீதம்-இழிஞர். ‘தக்கார்’ (ப.176,
பா.10) நலநீர-அழகிய தன்மையுடைய.

     7. பொ-ரை: திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி
நடனம் ஆடி, கொடி போன்ற மென்மையான சாயலை உடைய உமை