பக்கம் எண் :

654

பொடிபுல்கு நூன்மார்பர்
     புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே
     கோயிலாகக் கலந்தீரே.       7
2066.







திரையார்ந்த மாகடல்சூழ்
     தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர
     விரலாலூன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீ
     ரந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே
     கோயிலாக நினைந்தீரே.      8


யம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடி
பூசிப்பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரி நூலணிந்த அந்தணர் வாழும்
தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம்கோயிலாகக்
கொண்டுள்ளீர்.

     கு-ரை: புல்கு-சார்ந்த; கூடிய. ஆர்ப்ப-ஒலிக்க. பேர்ந்து-நட்டம்
ஆடி. ‘கொடி புல்கு மென்சாயல் உமை’ என்றது தேவியார் திருநாமம்
ஆகிய சௌந்தரியம்மை என்பதைத் தோற்றியது. பொடி-திருநீறு. புரிநூல்
ஆளர் -விரும்புகின்ற வேத நூல்களை ஆள்பவர். ‘நூன் மார்பர்’ என்று
முன் உள்ளதன் பொருளே கூறல் நன்றன்று. ‘மறையாளர்’ (பா.9)
(கடி-காவல்.

     8. பொ-ரை: திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை
மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால்
விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த
அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கி வாழும்
தலைச் சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக்
கொண்டுள்ளீர்.

     கு-ரை: திரை-அலை. மா-பெரியது. வரை-மலை. அரை-இடை.
நிரை-வரிசை. மேகலை-அணிவிசேடம். அரை ஆர்ந்த மேகலையீர், என்பது,
பாதி மாதை உடையீர் என்றவாறு. ’ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர்’
(பதி. 192 பா.2)