பக்கம் எண் :

655

2067.







பாயோங்கு பாம்பணைமே
     லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார்
     புறநின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர்
     திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே
     கோயிலாகச் சேர்ந்தீரே.       9
2068.







அலையாரும் புனல்துறந்த
     அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத்
     தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந்
     தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே
     கோயிலாக நின்றீரே.         10


     9. பொ-ரை: பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும்
திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று
காண இயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து
போற்றப் படுபவரே! முத்தீ வளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச்
செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம்
கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     கு.ரை: பாய்-பரந்து. போய்-கீழிடந்துபோய். ஓங்கி-மேற்பறந்துயர்ந்து.
புறம் நின்று ஓரார்-புறச்சமயக் கொள்கைகளில் நின்று ஆராயாதவர்.
அகச்சமயக் கொள்கை வழி ஆராய்பவர் என்றவாறு. புறம் வெளியுமாம்.
போற்று-துதி. ஓவார்-நீங்காதவர். தீ-வேள்வித் தீ. சேய்-உயர்வின் நீட்சி.

     10. பொ-ரை: அலைகளை உடைய நீரில் குளியாத அமணர்,
குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக்
காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங்