2069.
|
நளிரும்
புனற்காழி
நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை
யோங்குகோயின் மேயானை
ஒளிரும் பிறையானை
யுரைத்தபாட வலிவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த
வையத்தார்க்கு மேலாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
களை ஓதி உணர்ந்த
அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக
உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
புனல் துறந்த-குளித்தல் இல்லாத என்றவாறு. சாக்கியர்
என்பது புதிய பாடம். தொலையாது-இடையில் ஒழியாமல். அலர்-பழி.
நிலை - கோபுரநிலை.
11. பொ-ரை:
குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய
நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய
கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை,
போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால்
சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர்.
கு-ரை:
நளிரும்-குளிரும். மேயானை-மேவிய பெருமானை.
மிளிரும் திரை-விளங்கும் கடல். வையத்தார்-மண்ணுலகோர். மேலார்-
வானுலகோராவர்.
|