பக்கம் எண் :

657

56. திருவிடைமருதூர்

 

பதிக வரலாறு:

      பரவுவார் பிணிதீர்க்கும் நலத்தை உடைய திருவிடைமருதூர்
மகாலிங்கேசரை வணங்கிப் பாடிய பலபதிகங்களுள் இதுவும் ஒன்று;
(திருஞான - புராணம்-412)

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 192                               பதிக எண்: 56

திருச்சிற்றம்பலம்

2070.







பொங்குநூன் மார்பினீர்
     பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர்
     சாமவேத மோதினீர்
எங்குமெழிலார் மறையோர்கண்
     முறையாலேத்த விடைமருதில்
மங்குல்தோய் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.         1
2071.



நீரார்ந்த செஞ்சடையீர்
     நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன்
     றுடையீர் பூதம்பாடலீர்


     1. பொ-ரை: திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல்
அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை
தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர்
அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும்
முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம்கோயிலாகக்
கொண்டு மகிழ்ந்துள்ளீர்.

     கு.ரை: படை-கணம். எழில்-அழகு. எங்கும் ஏத்த மகிழ்ந்தீர் என்க.
மேலும் இவ்வாறே கூட்டுக. முறையால்-வேதாகம விதிப்படி. மங்குல்-மேகம்.

     2. பொ-ரை: கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில்
அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க் கருவி