பக்கம் எண் :

658

ஏரார்ந்த மேகலையாள்
     பாகங்கொண்டீ ரிடைமருதில்
சீரார்ந்த கோயிலே
     கோயிலாகச் சேர்ந்தீரே.      2
2072.







அழன்மல்கு மங்கையில்
     ஏந்திப்பூத மவைபாடச்
சுழன்மல்கு மாடலீர்
     சுடுகாடல்லாற் கருதாதீர்
எழின்மல்கு நான்மறையோர்
     முறையாலேத்த விடைமருதில்
பொழில்மல்கு கோயிலே
     கோயிலாகப் பொலிந்தீரே.    3


யாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே!
அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே!
நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு
எழுந்தருளியுள்ளீர்.

     கு.ரை: நிகழ்வித்தீர்-விளங்கச் செய்தீர். பூதம் பாடலீர்-பூதங்கள்
பாடுதலை உடையீர்.

     ஏர்-அழகு. சீர் சிறப்பு, மேன்மை.

     3. பொ-ரை: நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள்
பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே!
நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில்
உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு
பொலிந்துள்ளீர்.

     கு-ரை: அழல்-தீ. சுழல் மல்கும் ஆடலீர்-சூழ்தல் நிறைந்த
திருக்கூத்தை உடையீர்.

     பொழில்-பூஞ்சோலை. பொலிந்தீர்-பொன்போல் விளங்கினீர்.