பக்கம் எண் :

659

2073.







பொல்லாப் படுதலையொன்
     றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும்
     எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும்
     முறையாலேத்த விடைமருதில்
செல்வாய கோயிலே
     கோயிலாகச் சேர்ந்தீரே.         4
2074.







வருந்திய மாதவத்தோர்
     வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச
     மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
     சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே
     கோயிலாகப் புக்கீரே.           5


     4. பொ-ரை: பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச்
சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே!
விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற
இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக்
கொண்டுள்ளீர்.

     கு.ரை: பொல்லா-பொலிவில்லாத. விடையார் கொடி-
எருதுருவெழுதியகொடி. ‘ஏர்காட்டும் கோதிலா ஏறாங்கொடி’ (திருவா-
திருத்தசா - 10). எல்லாக் கணங்களும்-சிவகணம் முதலிய எல்லாமும்.
செல்வு ஆய-செல்வமாகிய, அம்விகுதி கெட்டது. ‘செல்வாய செல்வம்
தருவாய் போற்றி’, (அப்பர்) ‘செல்வாய்த் திருவானாய் நீயே’ (அப்பர்
பதி.255 பா.3).

     5. பொ-ரை: பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய
மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித் தைப்பூச நாளில்
காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும்
திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும்