2075.
|
சலமல்கு
செஞ்சடையீர்
சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன்
றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ
ரினிதாவேத்த விடைமருதில்
புலமல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே. 6 |
2076.
|
புனமல்கு
கொன்றையீர்
புலியினதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர்
செய்யீர்கரிய கண்டத்தீர் |
இடைமருதில் பொருந்தியுள்ள
கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
வருந்திய-தவத்தால் மெய் வருந்திய. ஏனோர்-மண்ணோர்,
பாதலத்தோர் முதலியோர். ஈண்டி-கூடி. இத் தலத்தில் தைப்பூசத்தில்
தீர்த்தமாடி வழிபடுதல் தொன்று தொட்டு நிகழும் வழக்கு. தேசம்புகுந்தீண்டி
ஓர் செம்மை உடைத்தாய், பூசம் புகுந்தாடி பூசம் நாம் புகுதும் புனலாடவே
(அப்பர்). பொலிவு-சிவப்பொலிவு.
6.
பொ-ரை: பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும்
நீறும் பூசியவரே! வெற்றி, பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில்
ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டுக்
காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான
கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
கு.ரை:
சலம்-கங்கை நீர். வலம்-வெற்றி. வலப்பக்கமும் ஆம். இலம்
-இல்லம்; வீடு. பற்றின்மையும் ஆகும். புலம்-அறிவு, இடமுமாம்.
7. பொ-ரை:
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச்
சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள்
|