பக்கம் எண் :

661

இனமல்கு நான்மறையோ
     ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில்
கனமல்கு கோயிலே
     கோயிலாகக் கலந்தீரே.      7
2077.







சிலையுய்த்த வெங்கணையாற்
     புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்டோளு
     நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும்
     வயலுஞ்சூழ்ந்த விடைமருதில்
நலமொய்த்த கோயிலே
     கோயிலாக நயந்தீரே.       8


விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக்
கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும்
சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை
நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: புனம் - கொல்லை. அதள் - தோல். மால்விடை -
திருமாலாகிய எருது; அறவிடை, உயிர் விடை என்பவை வேறு.
இம்மூன்றும் சிவபிரானுக்கு ஊர்தி, செய்யீர் - செந்நிறத்தை உடையீர்.

     ‘செம்மேனியெம்மான்’. இனம் - கூட்டம். மறைக்கும், மறையோர்க்கும்
பொது. கனம்-மேகம், கோயிலின் உயர்ச்சி குறித்தது.

     8. பொ-ரை: மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய
கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின்
பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே!
இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள
அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: உய்த்த-செலுத்திய. திறல்-வலிமை. தையல்-உமாதேவியார்.
நலம்-அழகு. நயந்தீர்-விரும்பினீர்.