2078.
|
மறைமல்கு
நான்முகனு
மாலுமறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர்
கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்க
ளாலுஞ்சோலை யிடைமருதில்
நிறைமல்கு கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே. 9 |
2079.
|
சின்போர்வைச்
சாக்கியரும்
மாசுசேருஞ் சமணரும்
துன்பாய கட்டுரைகள்
சொல்லி யல்லல்தூற்றவே
இன்பாய வந்தணர்க
ளேத்துமேர்கொ ளிடைமருதில்
அன்பாய கோயிதேல
கோயிலாக வமர்ந்தீரே. 10 |
9. பொ-ரை:
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய
இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை
உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில்
உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
கு.ரை:
கறை-நஞ்சின் கறுப்பு. அறை-ஓசை. கபாலம்-பிரம்ம கபாலம்.
ஆலும்-ஒலிக்கும். நிறை-நிறையால் நினைபவர் நிகழ்ந்தீர்-விளங்கினீர்.
10. பொ-ரை:
பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த
சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான
கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும்
அழகிய இடைமருதில் அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக்
கொண்டுள்ளீர்.
கு-ரை:
சின் (போர்வை) - சின்மை, அற்பம். திரிபு, நன்பொருள்
என்பதிற் போல லகரம் னகரமாகத் திரிந்தது. துன்பு ஆய
|