2080.
|
கல்லின்
மணிமாடக்
கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான்
நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி யிடைமருதில்
ஏத்துபாட லிவைபத்தும்
சொல்லு வார்க்குங்
கேட்பார்க்குந் துயரம்இல்லையே. 11 |
திருச்சிற்றம்பலம்
கட்டுரைகள்-துன்பந்தருவனவாய
கட்டிச் சொல்லியவை. அல்லல்-துன்பம்.
இன்பு-இன்பம். அன்பு ஆயகோ அன்பே சிவம் அன்பிற் குரியதாகிய
கோயிலுமாம். அமர்தல்-விரும்பியிருத்தல்.
11. பொ-ரை:
கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட
கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ்
ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல்
இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.
கு-ரை:
கல்லின் மணிமாடம்-கல்லாற் கட்டப்பட்ட அழகிய
மாடங்களையுடைய (கழுமலம்). கழுமலத்தார்-சீகாழியில் உறையும்
சிவமறையோர். காவலவன்-அரசன்; வேந்தன். சண்பையர் வேந்தன்
எல்லி-இரவு. துயரம்-பிறப்பு இறப்புக்கள்.
திருஞானசம்பந்தர்
புராணம்
பரவுறுசெந்
தமிழ்ப்பதிகம் பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பலபாடி வெண்மதியோ(டு)
அரவுசடைக் கணிந்தவர்தந் தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்.
-சேக்கிழார்.
|
|