பக்கம் எண் :

664

57. திருநல்லூர்

பதிக வரலாறு:

     முதல் திருமுறை பதிகம் 86 இன் பதிக வரலாறு காண்க.

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 193:                               பதி எண்: 57

திருச்சிற்றம்பலம்

2081.







பெண்ணமருந் திருமேனி
     யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே
     பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும்
     வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.      1
2082.



அலைமல்கு தண்புனலும்
     பிறையுஞ்சூடி யங்கையில்
கொலைமல்கு வெண்மழுவு
     மனலுமேந்துங் கொள்கையீர்


     1. பொ-ரை: உமையம்மை பொருந்திய திருமேனியை
உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதிஉடைய
நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய
பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால்
விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     கு.ரை: பெண்ணமருந் திருமேனி உடையீர்-மங்கை பங்கரே. பிறங்கு
-விளங்குகின்ற. பண்-இசை. திண்-உறுதி. மண் அமரு-மண்ணோர் விரும்பும்.
நிலத்தில் பொருந்தும் என்பது சிறந்ததன்று, ‘வானமருங்கோயில்’ (பா.4)
வான்தோயுங்கோயில் (பா.7).

     2. பொ-ரை. அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும்,
பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை