பக்கம் எண் :

665

சிலைமல்கு வெங்கணையாற்
     புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.      2
2083.







குறைநிரம்பா வெண்மதியஞ்
     சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோ
     டாடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும்
     வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.      3


வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற்
பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில்
மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

     கு-ரை: தண்புனல்-குளிர்நீர்; கங்கை. அனல்-தீ. கொள்கை-விரதம்;
மேற்கோளும் ஆம். சிலை-மேருமலையாகிய வில். வெங்கணை-திருமாலாகிய
அம்பில் தீயாகியமுனை உடைமையால் வெம்மை கூறப்பட்டது, கணையின்
கொடுமை குறித்தலுமாம். மலைமல்கு கோயில்-மலைபோலத் தோற்றம்
நிறைந்த கோயில். ‘வெள்ளிமால் வரையை-நேர் விரிசுடர்க் கோயில்’ (பெரி.
திருஞா- 368. பா-10 பார்க்க).

     3. பொ-ரை: என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த
மென்மையான சடைகள் தாழப் பறவைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை
விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு
கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே
நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.

     கு-ரை: குறைமதியம்; நிரம்பாமதியம்; வெண்மதியம் என்க. குறை
நிரம்பாத மதியமென்று கொளின் இறைவன் திருமுடி மேற்பிறை என்றும்
பிறையாகவே இருப்பதாம். தேய்தலுங் குறைதலுமில்லை