பக்கம் எண் :

666

2084.







கூனமரும் வெண்பிறையும்
     புனலுஞ்சூடுங் கொள்கையீர்
மானமரு மென்விழியாள்
     பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின்
     வண்டுபாடுந் திருநல்லூர்
வானமருங் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.    4
2085.



நிணங்கவரு மூவிலையு
     மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ
     டாடன்மேவு மழகினீர்


என்று கொள்ளலும் ஆம். பறை-வாத்தியங்கள். நவின்ற-மிக்கொலித்த.
சிறை-அணை. நவின்ற-செய்த. மறை நிவின்ற-வேதங்களைப் பயிலுதற்கு
இடமான.

     4. பொ-ரை: வளைந்த வெண்பிறையையும் கங்கையையும்
முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய
உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த
பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய
கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

     கு.ரை: கூன்-வளைவு. மான் அமரும் விழி-மான் மருண்டு நோக்குவது
போல நோக்கும் விழிகள். கண் வேறு விழிவேறு ஆயினும் இரண்டும்
ஒன்றாகக் கொண்டு இருவகை வழக்கிலும் ஆள்வர். மாண்பு-பெருமை.
வான்-வானோர். அமரும்-விரும்பித் தொழும். வானளாவிய எனலுமாம்.
‘மண்ணமருங் கோயில்’ (பா.1) ‘வான்தோயுங்கோயில்’ (பா.7).

     5. பொ-ரை: நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும்
கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப்
பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும்
பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே
நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.