பக்கம் எண் :

667

திணங்கவரு மாடரவும்
     பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.     5
2086.







கார்மருவு பூங்கொன்றை
     சூடிக்கமழ் புன்சடைதாழ
வார்மருவு மென்முலையாள்
     பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக்
     கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே
     கோயிலாக விருந்தீரே.      6


     கு-ரை: நிணம்-கொழுப்பு. நெறிகுழலாள்-நெறித்த கூந்தலையுடைய
உமாதேவியார். அணங்கு-தெய்வம். குழலாளாகிய அணங்கு என்றேனும்
தெய்வத்தன்மை பொருந்திய பாடல் என்றேனும் கொள்ளலாம். திணம்
(திண்ணம்)-உறுதியாக. கவரும்-(நஞ்சால் உயிரைக்) கவரும். அரவு-பாம்பு.
பிறையைத் திண்ணங் கவரும் அரவு எனலும் பொருந்தும். ‘சொலீர். . . .
.செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே’ (பதி.137 பா.1) மணம்-சிவமணம்.
கமழும்-மணக்கும்.

     6. பொ-ரை: கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச்
சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை
உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள்
அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு
விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.

     கு-ரை: கார்-கார்காலம். ‘காரார் கொன்றை’ (தி.1.ப.56.பா.1)
‘கார்மலி கொன்றை’ (தி.3 ப.60 பா.6) ‘காரினார் மலர்க்கொன்றை தாங்கு
கடவுள்’ (பதி.186 பா.6) ‘கார்க்கொன்றை மாலை கலந்ததுண்டோ’ ‘காரினார்
கொன்றைக் கண்ணியார்’ (தி.2 ப.162. பா.6) வார்-கச்சு. ‘தேர்மருவு
நெடுவீதிக் கொடிகள் ஆடும்’