பக்கம் எண் :

668

2087.







ஊன்றோயும் வெண்மழுவு
     மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய
     வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின்
     வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.        7
 2088.







காதமரும் வெண்குழையீர்
     கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண்
     மறுகும் வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள்
     பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.        8


என்றதால், திருநல்லூரில் பிரமோற்சமும் மாட வீதிகின் சிற்பும் குறித்தவாறு. ஏர்-அழகு.

     7. பொ-ரை: ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில்
ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும்
எல்லாத் திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக்
கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள்
இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக
மகிழ்ந்து உறைகின்றீர்.

     கு-ரை: ஊன்-தசை. மீன் தோயும் திசை-நட்சத்திரங்கள் பொருந்திய
வானம். இது பத்துத் திக்குகளுள் மேலிடம். வேடம்-நடனக்கோலம். வான்
தோயும் கோய்யில்;- ‘வான் அமரும் கோயில்’ (பா. 4).

     8. பொ-ரை: காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே!
சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும்
மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க,