2089.
|
போதின்மே
லயன்றிருமால்
போற்றியும்மைக் காணாது
நாதனே யிவனென்று
நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள்
தீமூன்றோம்புந் திருநல்லூர்
மாதரா ளவளோடு
மன்னுகோயில் மகிழ்ந்தீரே. 9 |
2090.
|
பொல்லாத
சமணரொடு
புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட்
டடியார்கள் போற்றோவா |
அதனைக் கண்டு உகந்தவரே!
தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள்
பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே
நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
கு-ரை:
காது-காதில். கறுத்த-கோபித்த. கருநிறமுடைய நீலமாமணி
நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்கவாலினால் கட்டிய வாலியார்
(தி.3 ப.91 பா.8). மாது-காதல். மறுகும் வண்ணம்-கலங்கும்படி. கண்டு
உகத்தல்;- மகிழ் விளையாட்டு. தீது அமரா - தீ வினையை வெறுத்த.
மாது-பெருமை.
9.
பொ-ரை: தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும்,
திருமாலும்
போற்றியும் உம்மைக் காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி
ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள்
முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையரோடு
மகிழ்ந்து உறைகின்றீர்.
கு-ரை:
போது-செந்தாமரைப்பூ. அயன்-பிரமன். நாதனே இவன்
என்று ஏத்தமகிழ்ந்து அளித்தீர். நயந்து-விரும்பி, பக்திகொண்டுமாம். தீ
மூன்று- ஆகவநீயம், காருக பத்தியம், தாட்சிணாக்கினி. மாதராள்-
அழகுடையாராகிய உமாதேவியார். மன்னு-நிலையுற்ற.
|