2093.
|
அடியார்ந்த
பைங்கழலுஞ்
சிலம்புமார்ப்ப வங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன்
றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர்
குலாவியேத்துங் குடவாயில்
படியார்ந்த கோயிலே
கோயிலாகப் பயின்றீரே. 2
|
2094.
|
கழலார்பூம்
பாதத்தீ
ரோதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீ
ரண்டர்போற்று மளவினீர்
குழலார வண்டினங்கள்
கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே. 3 |
2.
பொ-ரை: திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும்,
ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை
ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள
சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த
உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
கழலும் சிலம்பும் காலணி விசேடம். செடி-குணமின்மை.
நாற்றமுமாம். தேர்வீர்-தெரிவீர். குலாவி-கொண்டாடி.
3. பொ-ரை:
கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே!
முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு
அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில்
நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர்
கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில்
ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
ஓதம்-அலையை உடைய. விடம் உண்டு அன்று
|