பக்கம் எண் :

675

2095.







மறியாருங் கைத்தலத்தீர்
     மங்கைபாக மாகச்சேர்ந்
தெறியாரு மாமழுவு
     மெரியுமேந்துங் கொள்கையீர்
குறியார வண்டினங்கள்
     தேன்மிழற்றுங் குடவாயில்
நெறியாருங் கோயிலே
     கோயிலாக நிகழ்ந்தீரே.      4
2096.



இழையார்ந்த கோவணமுங்
     கீளுமெழிலா ருடையாகப்
பிழையாத சூலம்பெய்
     தாடல்பாடல் பேணினீர்

அழல் ஆரும் கண்டத்தீர் என்க. அழல்-நஞ்சினது வெப்பம். அண்டர்-
தேவர். போற்றும் அளவினீர்-வழிபடும் அளவிற்கேற்ற அருள் செய்வீர்.
குழல்-மகளிர் கூந்தல், குழலில் உள்ள மாலையிற் படிந்த வண்டு எனலுமாம்.
ஆர-நிறைய. குழலார-வேய்ங்குழலொலி நிறைய எனலும் பொருந்தும். நிழல்
-ஒளி, அருள்.

     4. பொ-ரை: மான் பொருந்திய கையினரே! உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும்
அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித்
தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள,
முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர்.

     கு-ரை: மறி-மான்கன்று. “யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே”. (தொல். மரபியல். சூ.12) கைத்தலத்தீர் -
கையிடத்தையுடையவரே! எறி (எறிதல்)-வீசுதல். எரி-தீ. குறி-போதுகளை
மலர்த்தும் குறிப்பு. ஆர-பொருந்த, தேன் உண்ணும் பொருட்டு. மிழற்றும்
-பாடும். நெறி-வேதாகம வழி. ஆரும்-பொருந்தும்.

     5. பொ-ரை: நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை
அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல்
பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில்