பக்கம் எண் :

676

குழையாரும் பைம்பொழிலும்
     வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே
     கோயிலாக மிக்கீரே.       5
 2097.







அரவார்ந்த திருமேனி
     யானவெண்ணீ றாடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண்
     டிமையோரேத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை
     வாசம்வீசுங் குடவாயில்
திருவார்ந்த கோயிலே
     கோயிலாகத் திகழ்ந்தீரே.    6

களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே
நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர்.

     கு-ரை: இழை-நூலிழை. கீள்-கிழி, கீழ், கீள் என மருவிற்று.
‘மடையில். . . . . சாம்பற்பூச்சும் கீள் உடையும் கொண்ட உருவம்’
(பதி.23 பா.1).

     ‘கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூமி’ (தி.7 பதி.240). ‘கீளலால்
உடையுமில்லை’(தீ.4 ப.40 பா.7).குழை-தளிர்,விழவு-திருவிழாக்கள்.

     6. பொ-ரை: பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு
அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை
மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே!
குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில்
உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.

     கு-ரை; அரவு - பாம்பு. வெண்ணீறாடினீர்-திருவெண்ணீற்றில் மூழ்குதலுடையீர். இரவு-இரத்தல். குரவு-குராமரம்.

     வாசம்-மணம். திரு-அழகு; ‘சென்றடையாத்திரு’.