பக்கம் எண் :

677

2098.







பாடலார் வாய்மொழியீர்
     பைங்கண்வெள்ளே றூர்தியீர்
ஆடலார் மாநடத்தீ
     ரரிவைபோற்று மாற்றலீர்
கோடலார் தும்பிமுரன்
     றிசைமிழற்றுங் குடவாயில்
நீடலார் கோயிலே
     கோயிலாக நிகழ்ந்தீரே.       7
2099.







கொங்கார்ந்த பைங்கமலத்
     தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட வழலாய்
     நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன்
தங்காதன் மாமுடியுந்
     தாளுமடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே
     கோயிலாகப் பரிந்தீரே.       8


     7. பொ-ரை: வேதப் பாடல்களில் அமைந்த உண்மை
வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை
ஊர்தியாக உடையவரே! ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே!
உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற்
பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த
கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.

     கு-ரை:பாடல்-வேதப்பாடலில். ஆர்-பொருந்திய. வாய்மொழியீர்
-சத்தியவார்த்தையாக விளங்குபவரே. வேதப்பாடல் பொருந்திய திருவாய்ச்
சொல் உடையீர் எனலுமாம்.

     ஏறு-ரிஷபம். ஊர்தி-வாகனம். மாநடத்தீர்-மகா தாண்டவம் செய்தீர்.
அரிவை-உமாதேவியார். ஆற்றல்-வலிமை. கோடல்-வெண்காந்தள்.
தும்பி-வண்டு. முரன்று-ஒலித்து. மிழற்றும்-இசை பாடும். நீடல்-நீளுதல்.

     8. பொ-ரை: தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும்,
குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய்