|
*
* * * * * * * 9 |
2100.
|
தூசார்ந்த
சாக்கியருந்
தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத்
தெழில்கொண்மாடக் குடவாயில்
ஆசாரஞ் செய்மறையோ
ரளவிற்குன்றா தடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே. 10 |
திறந்து தளர்ச்சியுற
அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய
முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக
விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.
கு-ரை:
கொங்கு-தேன், மணம், கமலத்து அயனும். தாமரை மீதுள்ள
பிரமனும். குறளாய்-வாமனமூர்த்தியாய். நிமிர்ந்தானும்-விக்கிரமனும்.
அங்காந்து-வாய்திறந்து. தள்ளாட-அசைய. தம் காதல்-தம்முடைய காதலை
விளக்கக்கூடிய. மா-பெரிய. தாளும்-அடியும். பங்கு-கூறு.
9. *
* * * * * *
10.
பொ-ரை: அழுக்கேறிய உடையினராகிய
சாக்கியரும்
தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன் மொழிகளை
வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில்,
தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில்
குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும்
கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.
கு-ரை:
தூசு-துரிசு ஏறிய உடை. தூய்மை-பரிசுத்தம். ஏசு-இகழ்ச்சி.
புன்மொழி-புல்லிய சொற்கள். நீத்து-நீக்கி. எழில்-அழகு. மாடம்-
மாடக்கோயில்; மாடங்களையுடைய எனினுமாம்.
ஆசாரம்-நல்லொழுக்கம்.
(வைதிக மார்க்கம்). குன்றாது-குறையாது.
தேசு-ஒளி.
|