பக்கம் எண் :

680

59. சீகாழி

பதிக வரலாறு:

     137 - ஆவது பதிகத் தலைப்பைக் காண்க

                   பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 195.                              பதிக எண்: 59

                   திருச்சிற்றம்பலம்

2102.







நலங்கொண் முத்து மணியும் அணியுந்
     திரளோதங்
கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர்
     கலிக்காழி
வலங்கொண் மழுவொன் றுடையாய் விடையா
     யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா
     அருநோயே.                     1


     1. பொ-ரை: அழகிய முத்துக்கள், மணிகள் அணிகலன்கள்
ஆகியவற்றை நீர்ப் பெருக்குடைய கடலின் மரக்கலங்கள் கொண்டு வந்து
கரையில் சேர்க்கும் ஆரவாரமுடைய காழிப்பதியில் வெற்றிவிளைக்கும் மழு
ஒன்றை ஏந்தியவனே! விடையூர்தியனே! என ஏத்தி மலர்மாலை முதலியன
சூட்டி வழிபட வல்லாரைத் தீர்தற்கரிய நோய்கள் அடையா.

     கு-ரை: நலம் - அழகு. முத்தும் மணியும் அணியும் தலங்களில்
ஓதம்கொண்டு சேர்காழி என்க.

     ஓதம் - அலைகளையுடைய கடல். கலங்கள்-மரக்கப்பல்.
தன் - சாரியை. கலி-ஓசையையுடைய, செழிப்புமாம். வலம் - வெற்றிக்குரிய
வலிமை. விடையாய்-எருது வாகனனே!. அலங்கல் - பூமாலை. அநோய் -
தீர்தற்கு அருமையதான பிறவி நோய் முதலியவை. ஏத்திச்
சூட்டவல்லார்க்கு நோய் அடையா என்க.