பக்கம் எண் :

681

2103.







ஊரா ருவரிச் சங்கம் வங்கங்
     கொடுவந்து
காரா ரோதங் கரைமே லுயர்த்துங்
     கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா
     வென்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும்
     பிணிதானே.                 2
2104.







வடிகொள் பொழிலின் மழலை வரிவண்
     டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்ற லணையுங்
     கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று
     முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை யல்ல
     லவலமே.                   3


     2. பொ-ரை: ஊர்தலை உடைய கடற் சங்குகளை மரக்கலங்கள்
கடல் ஓதநீர் வழியே கொண்டு வந்து கரையில் சேர்க்கும் கலிக்காழியில்
எழுந்தருளிய கங்கை தங்கிய சடையனே! நெற்றிக்கண்ணா! என்று பல
முறையும் அவனது பேர் ஆயிரமும் பிதற்றப் பிணிகள் தீரும்.

     கு-ரை: ஊர் ஆர் சங்கம்-ஊர்தல் பொருந்திய சங்குகளையும்.
உவரி-உப்பையுடைய கடலில் (உள்ள சங்குகளை). வங்கம்-கப்பல்.
கொடு-கொண்டு. கார் ஆர் ஓதம்-மேகம் உண்ணும் கடலின் அலைகள்.
வங்கம் கரைமேல் உயர்த்தப்படல் இல்லையாதலின், வங்கம்
செயப்படுபொருளாகாது. வங்கம் சங்கத்தைக் கொண்டுவந்து ஓதம்
கரைமேல் உயர்த்தும் என்க. கொடுவரல் வங்கத்தின் வினை.
உயர்த்துதல் ஓதத்தின் வினை. என்று என்று-அடுக்கு இடைவிடாது
சொல்லற் பொருட்டாய் நின்ற குறிப்பு. ஆயிரம் பேரும்-அநேக நாமங்களையும். பிணிதீரும்.

     3. பொ-ரை: திருத்தமான சோலைகளில் மழலையாய் வரி
வண்டுகள் இசை பாட மணம் கமழும் மலர்களில் படிந்து தென்றல்