2105.
|
மனைக்கே
யேற வளஞ்செய் பவளம்
வளர்முத்தங்
கனைக்குங் கடலு ளோத மேறுங்
கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியா
யெனப்பேணி
நினைக்க வல்ல வடியார் நெஞ்சி
னல்லாரே. 4 |
வீதிகளை அடைந்து மணம்
பரப்பி இதம் செய்யும் கலிக்காழியில்
எழுந்தருளிய முடிகொள் சடையாய்! முதல்வா என்று தவம் முயன்று
ஏத்தி அவன் அடிகளைத் தொழுவார்க்கு அல்லல் அவலம் ஆகியன
இல்லை.
கு-ரை:
வடி-திருத்தம், வடிநீள்மதில் (புறம். 18.) மாம்பிஞ்சு
என்றுமாம். மழலை-நிரம்பா மொழிபோலும் இனிமை செய்யும் வண்டின்
ஓசை. கடி-மணம். போதின் தென்றல்-மலரும் பருவத்தையுடைய
போதுகளிற்பட்டு அவற்றின் மணத்தைக் கொண்டு எறியும் (மந்தமாருதம்)
தென்காற்று. சடைமுடி. முயன்று-தவமுயன்று. அடி-திருவடிகளை.
கைதொழுவார்க்கு அல்லலும் அவலமும் இல்லை என்க. அல்லலால் வரும்
அவலம் எனலுமாம். அல்லல்-துன்பம். அவலம்-அழுகை. சோர்வு, வறுமை.
4. பொ-ரை:
ஆரவாரிக்கும் கடலின் ஓதம் பவளங்களையும்
முத்துக்களையும் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்து வளம் செய்யும் கலிக்
காழிப்பதியுள் எழுந்தருளிய, பனை போன்ற கையை உடைய யானையை
ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே! பெரியாய் என விரும்பிப் பேணி
நினைக்க வல்ல நெஞ்சினை உடையார் நன்னெஞ்சுடையார் ஆவர்.
கு-ரை:
மனை-வீடு. கனைக்கும்-ஒலிக்கும். ஓதம்-அலை.
பனைகைபகடு ஈர் உரியாய்-பனைமரம் போலும் பருத்த துதிக்கையையுடைய
யானையின் ஈர்த்ததோலைப் போர்த்தவரே! ஈர்-ஈர்த்த, உரித்த, ஈர் உரி -
(ஈர்மை-குளிர்ச்சி) ஈரியதாய உரி எனப் பண்புத் தொகையுமாம். பேணி-
விரும்பி. நெஞ்சின் நல்லார்-நெஞ்சின் நன்மையையுடையார். நல்ல
நெஞ்சத்தார்.
|