2106.
|
பரிதி
யியங்கும் பாரிற் சீரார்
பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங்
கலிக்காழிச்
சுருதி மறைநான் கான செம்மை
தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந்
துயர்போமே. 5 |
2107.
|
மந்த
மருவும் பொழிலி லெழிலார்
மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய்
கலிக்காழிப் |
5. பொ-ரை:
கதிரவன் உலாவரும் உலகின்கண், சிறப்புமிக்க
தொண்டுகளோடு சுருதிகளை அறிந்த விண்ணோரும் மண்ணோரும்
விரும்பி வழிபடும் கலிக்காழியுள் மேவிய செவிவழியாகக் கேட்டு
ஓதப்பெறும் நான்கு வேதங்களான செம்மையைத் தருபவனை நினைந்து,
அவனை வழிபட, எழுந்தால் தவறாது உங்கள் துன்பங்கள் தீரும்.
கு-ரை:
பரிதி-சூரியன். இதைப் பருதி என்றெழுதுவது குரிசில்
என்பதைக் குருசில் என்றெழுதுவது போலும் பிழை. (இலக்கியச்
சொல்லகராதியின் உபக்கிரமணிகையில் பக்கம் 15, பார்க்க) அடிசில்,
பரிசில் முதலியவற்றுள் இரண்டாவதெழுத்து உகரமாய் நிற்றலில்லாமையே
அதற்குச் சான்று. பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில் வலியவாகும்
நின்தாள்தோய் தடக்கை (புறம் 14.) பரிசில் நல்குவையாயிற் குரிசில்
நீ
(புறம். 146) பாரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே (புறம். 333) என
எதுகையில் நின்றதறிக. ஏனையிடங்களுள், குருசில் என்றிருத்தல்
பொருந்தாமை. இவ்விரண்டு காரணங்களால் புலப்படும். சுருதி-கேள்வி.
நான்மறைக் கேள்வியான செம்மை தருவானை வழுவாவண்ணம் கருதி
எழுமின் துயர்போம் என்க. ஆசிரியர், நான்மறைகளையும்
ஆறங்கங்களையும் நினைவூட்டும் இடங்களை நோக்கின் வேதநெறி
தழைத்தோங்க. . . அழுத உண்மை தெளிவாகும்.
6. பொ-ரை:
தென்றல் தவழும் பொழிலின்கண் எழுச்சியோடு
தேனை உண்டு மணம் பொருந்தியனவாய் வரி வண்டுகள் இசை
|