|
பந்த
நீங்க வருளும் பரனே
யெனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா
திருப்பாரே. 6 |
2108.
|
புயலார்
பூமி நாம மோதிப்
புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணா ரொலிசெய்
கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத்
தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற
முடுகாதே. 7 |
செய்யும் கலிக்காழியில்
விளங்கும், பந்தங்கள் நீங்க அருளும் பரனே! என
ஏத்தி அவனைச் சிந்தையில் நினைவார், செம்மை நீங்காதிருப்பர்.
கு-ரை:
மந்தம்-தென்றல் காற்று. மருவும்-பொருந்தும். எழில்-எழுச்சி.
மது-தேன். கந்தம்-மணம். பந்தம் பசு பாசப்பற்று. பற்றற பற்றற
என்பதெல்லாம் பசுபாசம் விடல் மற்றொரு பற்றறல் இல்லை என்றான்,
மன்னும் வெங்கலியைச், செற்றருள் சிற்றம்பலநாடி வண்மைச் சிரபுரத்தோன்
உற்றதபோதனரே ஒழிந்தே இரும் உம்மையுமே எனும் சிற்றம்பலநாடிகள்
சாத்திரக்கொத்துள் வருங்கட்டளைக் கலித்துறையை அறிக.
பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனை அப்பசு பாசம்
ஆகிய பந்தம் நீங்காமல் பார்த்தல் கூடாது. பந்தம் நீங்க அருளும் பரனே
என ஏத்திச் சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பார் என்பது அதை
இனிது விளக்கிற்று. செம்மைதிருநின்ற செம்மை. (தி.4 ப.8 பா.1; தி.7பதி.396)
7. பொ-ரை:
மேகங்களால் வளம் பெறும் மண்ணுலகில் வாழும் கயல்
போலும் விழிகளை உடைய பெண்கள் இறைவன் திருப்பெயர்களைப் புகழ்
பொருந்த இசையோடு ஓதி ஒலி செய்யும் கலிக்காழியுள் விளங்கும்
அப்பெருமானை அன்பு மேலிடத் தொழுது ஏத்த முயல்வார் மேல் கொடிய
கூற்றுவன் வந்தடையான்.
|