2109.
|
அரக்கன்
முடிதோள் நெரிய வடர்த்தா
னடியார்க்குக்
கரக்க கில்லா தருள்செய் பெருமான்
கலிக்காழிப்
பரக்கும் புகழான் றன்னை யேத்திப்
பணிவார்மேற்
பெருக்கு மின்பந் துன்பமான
பிணிபோமே. 8 |
கு-ரை:
புயல்-மேகம். பெருங்காற்று எப்போதும் உள்ள
தன்மையின்மையின் பொருந்தாது. பூமி-மண்ணிடத்துள்ளோர். நாமம்-
சிவனெனும் நாமம் நந்திநாமம் நமச்சிவாயவே நல்ல நாமம்
நவிற்றிஉய்ந்தேன் நாமம்பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும். .
.உரைக்கத் தருதி திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் பராபரன்
என்பது பேராக்கொண்டார் (அப்பர். 310. பொது. 11.) கயல் ஆர்
கண்ணார்-மீனோக்கியர். கயற்கண்ணியர். பண் ஆர் ஒலி-பண்ணொடு
பொருந்திய இசை. பயில்வான்தன்னை-பயின்ற தொல்லோனை (சிவபிரானை)
பழையோன்.
பத்தி-பக்தி.
அன்பு ஆர நிறைய. முயல்வார்மீதே முடுகாது கூற்று
என்றால், முயன்றார் மீது முடுகாமை கூறல்வேண்டா. விண்ணிடைத்
தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்? பண்ணிடைச் சுவைகள் பாடி
ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்
டனாரே (பதி.31 பா.2) கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு
(தி.7 பதி.281).
8. பொ-ரை:
இராவணனின் முடி, தோள் ஆகியன நெரிய
அடர்த்தருளிய, தன் அடியவர்கட்கு மறைக்காமல் அருளைச் செய்யும்
பெருமான் எழுந்தருளிய கலிக்காழியை அடைந்து உலகம் முழுதும் பரவிய
அப்புகழாளனை ஏத்திப் பணிவார்க்கு இன்பங்கள் பெருகும், துன்பந்தரும்
பிணிகள் போம்.
கு-ரை:
அரக்கன்-இராவணன். அடியார்க்குக் கரக்ககில்லாது -
அடியவர்க்கு (அருளை) மறைக்கமாட்டாமல். கில்-ஆற்றலை உணர்த்துவது.
சிவபெருமான் தன் அடியவர்க்கு அருளை மறைக்கும் ஆற்றல் இல்லாதவன்
என்பதுணர்க. குறைவிலா நிறைவு எனப்படும்
|