2110.
|
மாணா
யுலகங் கொண்ட மாலு
மலரோனுங்
காணா வண்ண மெரியாய் நிமிர்ந்தான்
கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத்தானைப்
புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்ச முடையார்க் கில்லைக்
குற்றமே. 9 |
பரமேச்சுவரனுக்கும்,
தன் அடியார்க்கு இன்பங்கள் தருவதை மறைத்துக்
கொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு குறை உண்டு என்று உணர்த்திய நயம்
போற்றத்தக்கது. பணிவார்மேல் இன்பம் பெருக்கும், துன்பமானபிணிபோம்.
கில்லாமை;-கிற்றிலேன், கிற்பன் உண்ணவே (திருவாசகம் 45).
9. பொ-ரை:
பிரமசாரி வடிவினனாகி உலகை அளந்து கொண்ட
திருமாலும் நான்முகனும் காணா வண்ணம் எரியுருவாய் நிமிர்ந்தான்
உறையும் கலிக்காழியை அடைந்து அணிகலன்பூண்ட தனங்களைக் கொண்ட
அம்பிகை பாகனைப் புகழ்ந்து போற்றித் திருகல் இல்லாத மனமுடைய
அடியவர்க்குக் குற்றம் இல்லை.
கு-ரை:
மாணாய்-பிரமசாரியாய். மாண்-மாணி. குறுமாண் உருவன்
தற்குறியாக (தி.1ப.101.பா.5) மாணாகி வையம் அளந்ததுவும் என்று
திருமங்கைமன்னன் பாடியதிலும் மாண் என்பது இப்பொருளில் வந்திருத்தல்
அறிக. பூண்-ஆபரணம், பங்கத்தானை-(வாம) பாகத்தையுடைய
சிவபெருமானை.
கோணா நெஞ்சம்-திருகலில்லாத
உள்ளத்தை. கோணல்-சிந்தைத்திருகு
மலக்கோண் யான் செய் தேன் பிறர்செய்தார் என்னது யான் என்னும்
இக்கோணை ஞான வெரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிட
(சிவஞான சித்தியார். கடவுள் வாழ்த்துரை+சூ. 10. திருவிருத்தம். 2) லுடை
யார்க்குக் குற்றம் இல்லை என்க. இல்லைக்குற்றம் என்று மிக்குப்
புணர்ந்ததற்கு இல் என் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும்
ஐயிடை வருதலும். . .ஆகிடன் உடைத்தே என்ற தொல்காப்பியச்
சூத்திர(372) விதி காண்க.
|