பதிக
வரலாறு:
பாரெல்லாம்
உய்யவந்த பாலறாவாயர், எம்மையாளும் அம்மை
திருத்தலையாலே நடந்துபோற்றும் அம்மையப்பர் திருவாலங்காடு ஆம்
என்று, அம்மூதூர் மிதிக்க அஞ்சி அணுகச் சென்று, செம்மைநெறிவழுவாத
பதியின் பக்கத்தில் உள்ள ஓரிடத்தில் இரவில் தங்கினார். இடை யாமத்தில்
கனவில் நம்மைப் பாடுவதற்கு மறந்தனையோ என்று ஆலங்காட்டப்பர்
அருளினார். அவர் கருணை போற்றி மெய்யுருகித் துஞ்ச வருவார் எனத்
தொடங்கும் சுருதிமுறை வழுவாத திருப்பதிகம் பாடிப் பழயனூர்
வரலாற்றைச் சிறப்பித்துச் சொல்லித் திருவருளை உணர்த்தி அங்கிருந்து
திருப்பாசூர் அணைந்து அருட்கருணைத் திருவாளன் நாமம்
சிந்தையிடையார் என்று அருளிய இசைப்பதிகம் இது.
பண்:காந்தாரம்
ப.தொ.எண்: 196
பதிக எண்: 60
திருச்சிற்றம்பலம்
2113.
|
சிந்தை
யிடையார் தலையின் மிசையார்
செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென்
மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வா
ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த
பாசூரே. 1 |
1. பொ-ரை:
மனத்திலும் தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர்,
மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா!
மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி
படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
கு-ரை:
சிந்தை, தலை, சொல் என மனம், காயம், வாக்கு ஆகிய
திரிகரணங்களையும் உணர்த்தி அம் மூன்றிலும் சிவபெருமான்
|