பக்கம் எண் :

690

2114.







பேரும் பொழுதும் பெயரும் பொழுதும்
     பெம்மானென்
றாருந் தனையு மடியா ரேத்த
     வருள்செய்வார்
ஊரு மரவ முடையார் வாழு
     மூர்போலும்
பாரின் மிசையார் பாட லோவாப்
     பாசூரே.                   2


இருத்தலை மூவேறு சிறு வாக்கியங்களாக அருளிய திறம்
அன்பரெல்லாராலும் அறியத்தக்கது. சிவ பூஜையில் அந்தரியாகத்தாலும்,
தோத்திரத்தாலும் இந் நிலையை அநுபவித்து உணர்ந்து போற்றுதல்
இன்றியமையாதது. (பதி,.61 பா.6.) ‘சிந்தையுள்ளும் நாவின் மேலும்
சென்னியும் மன்னினான்’ (தி.1 ப.73 பா.9) -சிந்தையிடையார்-
‘மனத்தகத்தான்’. தலையின் மிசையார். ‘தலைமேலான்’. செஞ்சொல்லார்-
‘வாக் கினுள்ளான்’. ‘மூவாத சிந்தையே மனமே வாக்கே தன் ஆனையாப்
பண்ணியேறினான்’ (அப்பர்-227 ‘வாயானை-மனத்தானை’ என்பது இதனின்
வேறு. மாலை-மாலைப் பொழுது. (வந்து) வைகும் போழ்து-
தங்கும்வேளையில். மைந்தரென்றும் மணவாளரென்றும் துதிக்க மகிழ்பவர்
(சிவபெருமான்). பாசூர் மகிழ்வார் ஊர்போலு மென்று கூட்டுக. பைந்தண்
மாதவி-பசுமையும் தண்மையுமுடைய குருக்கத்தி. பாசூர்-(பசுமை+ஊர்)
இன்றும் பசுமைமிக்கதாகவே விளங்குகிறது.

     2. பொ-ரை: இடம் விட்டுச்செல்லும் போதும், வரும்போதும்
பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள்
செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும்
ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்.

     கு-ரை: பெயர்தல்-பேர்தல் என மருவும். ஆயினும் இங்கு
இரண்டும் வேறுபட்டனவாகத் தோற்றுதலால் பொருளிலும் ஏதேனுமொரு
வேறுபாட்டைக் கொள்ளுதல் வேண்டும். பேர்தல் முதன் முதலாக இடம்
விட்டு அசைதல். பெயர்தல்-மீண்டும் வருதல். இவ்விரண்டு காலத்தும்
இறைவனை மனம் நிறைவுறுமளவும் அடியார் ஏத்த அருள் செய்வான்.
தனை-அளவு. ஊரும் அரவம்-நகரும் பாம்பு. பாரின்மிசையார்-
மண்ணுலகத்தார். பாடல்-தோத்திரப் பாடல்கள். ஓவா-ஒழியாத. பாசூரே
அருள் செய்வார் ஊர்போலும்.