பக்கம் எண் :

691

2115.







கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங்
     கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும்
     விகிர்தனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு
     மூர்போலும்
பைவாய் நாகங் கோடலீனும்
     பாசூரே.                 3
2116.



பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
     பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங்
     குளிர்வித்தார்


‘பண்ணின் மொழியார் பாடல் ஓவாப்பாசூரே’ (பா-7). இவ்வாறே மேலும்
கொள்க.

     3. பொ-ரை: கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும்,
உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும்
துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும்
ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்
காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.

     கு-ரை: கைகளைப் பெற்றதன் பயனாகப் பாசூரீசன்
பைங்கழலைத் தொழுதும், தலை உடையதன் பயனாக வணங்கியும்,
உள்ளம் வாய்ந்ததன் பயனாக உருகியும் வழிபடும் அடியார்களுடைய
மெய்யிற்பொருந்தியகுறைகளையும் துயரங்களையும் ஒழிக்கும் அநாதி
மலமுத்தர். நெய் முதலிய அஞ்சும் (ஆனைந்தும்)ஆடுதலுடையார்.
திருமுறைகளுள் ‘ஆனைந்து’ எனப்படினும் ஜலமும் மயமும் விட்டுப்
பால் முதலிய மூன்றுமே கூறப்படும் உண்மையை ஆங்காங்குணர்க.
‘ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்’ பால் நறு நெய் தயிர் ஐந்தாடு
பரம்பரன்’ (தி.7ப.84பா.9) நிலாவுதல்-நிலவுதல். பை வாய் நாகம்-படம்
வாய்ந்த நாகம்; படத்தொடு கூடியவாய் எனினும் ஆம். நாகம் கோடல்
ஈனும்-பாம்பைப்போல வெண்காந்தள் மலரைத் தோற்றும்.

     4. பொ-ரை: சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும்
சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச்