பக்கம் எண் :

692

தங்கா தலியுந் தாமும் வாழு
     மூர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும்
     பாசூரே.                     4
2117.







ஆடற் புரியு மைவா யரவொன்
     றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும்
     பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையா
     ரூர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப்
     பாசூரே.                     5


சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும்
வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல
அரும்புகள் ஈனும் பாசூராகும்.

     கு-ரை: ‘கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று
இலோமே’ என்றுஅருளிய உண்மையை உணர்ந்து நம்பி யாரூரரும்,
‘வம்பறாவரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நற்கொன்றையான்
அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தனடியார்க்கு மடியேன்’
என்றருளினார். அதனை ஈண்டும் உணர்வாம். ‘கொன்றைமாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று பொய்யாத சேவடிக்கே
போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே’ என்று ஆளுடை
அரசரும் அருளியதை நினைக்க (தி.6 ப.99 பா.8). சிவபூஜை
செய்வோருக்குக் கொன்றைப் பூக்களால் வழிபடும் பேரன்பு உண்டு.
பொலிவு-விளக்கம். எய்த-அடைய. கொங்கு-மணம். குளிர்வித்தாராகிய
தாமும் தம் காதலியும் வாழும் ஊர் என்க. காதலி- உமாதேவியார்.
பைங்கான்-பசிய மணம்;- கால் கொடியையும் காட்டையும் கொடியேற
நட்டகாலையும் குறித்ததாக்கோடலும் பொருந்தும். பல்லரும்பு- பல்போலும்
அரும்பு; பல அரும்பு.

     5. பொ-ரை: ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக்
கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர்.
ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும்
குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும்.