2118.
|
கானின்
றதிரக் கனல்வாய் நாகங்
கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத்
தொழுவார்கள்
மால்கொண் டோட மையல் தீர்ப்பா
ரூர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த
பாசூரே. 6 |
2119.
|
கண்ணி
னயலே கண்ணொன் றுடையார்
கழலுன்னி
எண்ணுந் தனையு மடியா ரேத்த
வருள்செய்வார் |
கு-ரை:
ஆடல் புரியும் - (படமெடுத்து) ஆடுதலைச்செய்யும்.
ஐவாய் அரவு-ஐந்தலைப் பாம்பு. அரை-திருவரை. சாத்தும்-சார்த்தும்.
சேடச் செல்வர்-சேடராகிய செல்வர் (தி.1 ப.5 பா.2) உடையவர். சேடர்
வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன். சேபுர்விண்ணோர்கட்குத் தேவர்
(தி.3 ப.9 பா.7) சேடர் தேவன் குடித்தேவர் தேவன் (தி.3 ப.52 பா.11)
என் புழிப்போலப் பெரியோருமாம். (தி.1 ப.25. பா.11). வாடல் தலை-வாடு
தலை அடைந்த பிரமகபாலம். வாடல் வெண்தலை சூடினர். (தி.1 ப.56 பா.7)
வாடல் வெண்டலை மாலை (தி.2 ப.50 பா.11). வாடற்றலை மாலை
(தி.2 ப.71 பா.3) வாடல்வெண்தலை (தி.2 ப.112. பா.2) பாடல் குயில்கள்-
பாடு தலையுடைய குயில்கள். பயில்-பயின்ற. பூஞ்சோலை.
6. பொ-ரை:
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக
இடையில் கட்டிக்கொண்டு தோலைஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர்.
தம்மைத்தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின்
மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும்
மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆம்.
கு-ரை:
கால் நின்று அதிர-திருவடி ஊன்றி நடஞ்செய்ய. கனல்-
நஞ்சின் வெம்மை. கச்சு அரைக்கு அசைக்கும் கச்சு. விடையார்-
இடபவாகனத்தார். மால்-அன்பு. (ப. 182 பா.1) மையல்-மயக்கம். மதிதோய்
மாடம்-சந்திர மண்டலத்தை அளாவிய உயரியமாடம். பால் வெண்மதி-
பால்போலும் வெண்ணிறத்தை
|