1.அவை
வேறு பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத்தலாலும்,
2.சைவத்தோடு நெருங்கிய தொடர்பில்லாமையாலும், 3. தமிழில் பிறசமய
நூல்கள் பல உள்ளமையாலும் அவற்றை ஈண்டுச் சைவத் தோடு சேர்த்து
வாழ்த்தினார் என்றால் பொருந்தாது. சைவமும் சைவத்தைச் சார்ந்த தமிழும்
தழைத்து இனிது ஓங்கவேண்டும் என்று பொருள்காணல் எத்துணை அழகாக
உள்ளது! திருவான்மியூர்ப் பதிகத்துத் தோனயங்கமராடையீனிர் என்பதற்கு
(பதி.140-3) உரைகாணுங்கால் அத்தொடருக்குள்ள பொருளை அறிதலில்
உள்ள இன்னல்களைத் தருக்க நூன்முறையில் ஆசிரியர் வரைவது கழி
பேருவகை பயப்பதாகும்.
தோனயங்கமராடையினீர்
என்பதற்குச் செம்பொருள் கொள்ளல்
எளிதன்று, தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல்
எவ்வாறு? நயம் கமர் என்னின் கமர் என்பதன் பொருள் யாது? நயங்கு
அமர் என்னின் நயங்கு என்பது தமிழில் இல்லை. தோன் எனப்பிரித்தல்
ஒவ்வாது?
திருச்சிக்கற்
பதிகத்துத் தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன்
என்ற தொடர்க்கு (பதி.144-8) உரைகாணுங்கால், தெற்றல்-அறிவில்
தெள்ளியவன் என எழுதி, அதற்கு இலக்கிய மேற்கோளுண்டோ என்ற
வினாவைத் தம்முள் எழுப்பிக் கொண்டு அதற்குச் சான்று பகர்வார்போன்று
நடை கற்ற தெற்றல் என்ற திருவாய்மொழி வரியை எடுத்துக் காட்டி,
பிறர்கூறும், புதுப்பொருளாகிய மாறுபாடுடையவன் என்பது ஆதாரமில்லாத
பொருள் என்று ஆணித்தரமாக முடிவு காட்டியிருப்பது அறிவாளர்க்கோர்
பெருவிருந்தாம். இன்னும் அவ்விடத்தே ஆசிரியர் வற்புறுத்தும் கருத்து
மிகமிகப் போற்றத் தகுந்தது. அச்சீரிய வரியினைக் காண்க.
இராவணன்
ஒழுக்கத்திற் பிழைத்தவனே, ஆயினும் அறிவிற்
சிறந்தவன்
திருக்கோழம்பப்
பதிகத்து ஏதனை ஏதமிலா இமையோர் தொழும்
வேதனை என்றவிடத்து (பதி.149-3) உரை கொள்ளுங்கால், இமையோர்
என்பதற்குத் தேவர் என்று பொருள் கூறுவர், இது சைவநூல்கட்கு ஒவ்வாது
என்று முன்னர்க் கூறி, பின்னர் அவ்வாறு பிறர்பொருள் கூறுவதன்
காரணத்தை விளக்குவாராய் இமைத்தலில்லாதவர் என்னும் சாமான்யம் பற்றி
இவ்வாறு கூறுவர் என்று தெளிவுறுத்திப் பின் தாங்கொண்ட பொருளை
நிறுவுவாராய்,
|