2136.
|
பூவார்
சடையின் முடிமேற் புனல
ரனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண்
டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்
பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச்
சூராரே.
2 |
2137.
|
பொன்னேர்
கொன்றை மாலை புரளு
மகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச்
சூரானைத்
|
2. பொ-ரை: திருமீயச்சூர் இறைவர்
மலர் அணிந்துள்ள
சடைமுடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர்.
நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய
தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில்
திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு
வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.
கு-ரை: பூ-கொன்றைப்பூ. அன்பர் அர்ச்சிக்கும்
பல்வேறு
மலர்களும் ஆம். புனலர்-கங்கையை அணிந்தவர். அனல் கொள்வர்-தீ
யேந்துபவர். நா ஆர் மறையார்-வேதங்களை அருளிய நாவினர். பிறையர்-
பிறைசூடியவர். நற வெண்தலை-நாற்றத்தையுடைய வெளிய பிரமகபாலத்தை.
ஏ-பெருமை. மலை- மேருமலை. சிலையா-வில்லாக. கழியம்பு-கோல் அம்பு.
எரி-அக்கினி. திருமால் அம்பாகவும் அக்கினி அவ்வம்பின் நுனியாகவும்
கொண்ட வரலாற்றை நினைக்க. எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி
நாண் கல்வில் (தி. 1) மேவார்-பகைவரது. புரம்மூன்று-திரிபுரத்தை,
புனலரும், கொள்வரும், மறையரும், பிறையரும், ஏந்தி வாங்கி எரித்தாரும்
ஆகிய சிவபிரானார். மீயச்சூரில் திருக்கோயில் கொண்டு
எழுந்தருளியுள்ளார்.
3. பொ-ரை: பொன்போன்ற கொன்றை
மாலைபுரளும் மார்பினனும்,
மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார்
|